தண்ணியில் நடந்து ஆற்றை கடந்த பல்லி ஒன்றின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவை பெற்று தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக தற்போது இணையத்தில் பாம்பு, முதலை என ஊர்வன வகைகளின் வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது. இதன்படி, பல்லியொன்று ஓடும் ஆற்றில், தண்ணீருக்கு மத்தியில் மாட்டிக் கொண்டுள்ளது. இது கரைக்கு செல்வதற்காக தண்ணீரில் குதித்து கடகடவென நடந்து கரையை நோக்கிச் செல்கிறது. மேலும் ஊர்வன வகையில் தண்ணீர் மற்றும் கடும் சூட்டு நிலம் என எதில் மாட்டிக் கொண்டாலும் இலகுவாக தப்பிச் செல்லும் சிறப்பம்சம் அதிகமாகவே இருக்கும். இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை Susanta Nanda IFS என்பவர் தன்னுடைய டுவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வைரலாகும் வீடியோ காட்சி இந்த வீடியோ காட்சியை ரசிகர்கள் பலரை வியப்படைய வைத்துள்ளது. மேலும் இந்த வீடியோக் காட்சி ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் பார்வையிட்டுள்ளனர்.
