விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவை பெற்று தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

கடந்த 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி மயிலாடுதுறையில் பிறந்த இவர் அங்கே பள்ளி படிப்பையும் முடித்திருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது இவருடைய கணவர் பெயர் சதீஷ் என்பதாகும். இவருக்கு ஒரு அழகிய ஆண் குழந்தையும் உள்ளது.


இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்” எனும் சீரியலில் “மீனா” எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே அமைத்துக் கொண்டார். அதுமட்டுமின்றி இவர் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதுமட்டுமின்றி இவர் 2015ஆம் ஆண்டு விஷால் மற்றும் காஜல் அகர்வால் நடித்து வெளியான “பாயும் புலி” எனும் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாகவும் உதயமானார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் சிறு கேரக்டரில் நடித்துள்ளார்.

இவரை நடிகை ராதா பாராட்டி இருக்கிறார் என்ற விஷயம் பலருக்கும் தெரியாது. மேலும் இவர் முதல் முதலில் சின்னத்திரையில் அறிமுகமானது “ஆபீஸ்” என்ற சீரியல் மூலம் தான். அதன் பிறகு இவர் பொன்னூஞ்சல், தென்றல், சின்னத்தம்பி, குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு என பல சீரியகளில் பக்காவாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி உள்ளார்.


லட்சக்கணக்கான ரசிகர்களை தன்னுடைய இணைய பக்கத்தில் பின் தொடர வைத்திருக்கும் இவர் அவர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக செய்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது மஞ்சள் நிற உடையை அணிந்து கொண்டு தன் முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்து உள்ளார் என்று கூறலாம்.




